கடந்த நான்கு ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது பசும்பால் விலை ரூ.3 உயர்ந்து ரூ. 25க்கும், எருமைப்பால் விலை ரூ.5 உயர்ந்து ரூ.30க்கும் கொள்முதல் செய்யப்படுகின்றது. நகர்ப்புறங்களில் அரசு பாலை கொள்முதல் செய்வதுபோல், கிராமத்திலும் அரசே கொள்முதல் செய்யவேண்டும் என கால்நடை வளர்ப்போர் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக ஆடு, மாடு, கால்நடைகளை வளர்க்கும் பிரதான தொழில் உள்ளது.

இதில் ஆடு வளர்ப்பு முறையை காட்டிலும் கறவை மாடுகள் வளர்ப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது. தினமும் பால் மூலமாக வருவாய் கிடைக்கும் கறவை மாடுகளின் மூலமாக தினசரி பால் கறந்து விற்பனை செய்து அதன் மூலமாக கணிசமான வருவாய் ஈட்ட முடிகிறது. இதனால் பெரும்பாலான கால்நடை வளர்ப்பு எருமை மற்றும் கறவை பசுக்களை வளர்ப்பதற்கு அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் இந்த விலை உயர்வு செய்தியால் கால்நடை வளர்ப்பவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.