வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சரான மூர்த்தி அளித்த பேட்டியின் சிறப்பம்சம் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். அதாவது “வணிகவரி மற்றும் பதிவுத் துறையில் கடந்த வருடத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 690 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. அரசின் வரி வருவாயை அதிகரிக்கும் அடிப்படையில் GST வரம்புக்குள் அதிகமானோர் கொண்டுவரப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து வரி ஏய்ப்பில் ஈடுபடக்கூடிய நிறுவனங்களின் தொழில் உரிமமானது பறிக்கப்பட்டு மீண்டும் அவர்கள் வணிகத்தில் ஈடுபட முடியாத சூழல் ஏற்படுத்தப்படும். அதன்பின் போலி பத்திரப்பதிவுகள் பற்றி புகார் வந்த 60 நாளுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கிடையில் 2 ஆயிரம் போலிப் பத்திரங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் பேட்டியளித்துள்ளார்.