தேர்தல் காலம் சூடுபிடித்திருக்கும் நிலையில் முக்கிய பிரமுகர்களின் கட்சி தாவல் தொடங்கியுள்ளது. நேற்று இரவு வரை ஒரு கட்சி இன்று வேறு கட்சி என பரபரப்பு தகவல் அவ்வப்போது வெளியாக தொடங்கியுள்ளது. அந்த வகையில், நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக வலைதள மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் கிருபாகரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். சமீபத்தில் நடிகை கௌதமியும் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.