அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள மில்வாக்கியில், இரண்டு சிறுமிகளிடம் பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொடூரமான நடத்தைகளை மேற்கொண்டதாக 64 வயதான டேவிட் பாய்டு என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுமிகள் தனது பழைய பாதுகாவலர் செய்த கொடுமைகளை புதிய ஃபாஸ்டர் பெற்றோரிடம் பகிர்ந்ததையடுத்து இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாய்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமைகளுக்குப் பின்னர், அந்த இரண்டு சிறுமிகளில் ஒருவரை தன் வீட்டின் அடித்தளத்தில் கம்பியுடன் கட்டிவைத்து, வெறும் ஒரு துண்டு ரொட்டியை மட்டுமே உணவாக கொடுத்து, கழிவுநீர் சேரும் தரையில் இருந்து தண்ணீர் குடிக்க வைத்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் அவர் அவளை அடிக்கடி கத்தியால் வெட்டுவதாகவும், சொல்வதை கேட்காமல் இருந்தால் அவரது உடல் உறுப்புகளிலும் தாக்குவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் அந்த சிறுமிகளை மற்ற ஆண்களுக்கு பாலியல் உறவுக்காக விற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, அடித்தளத்தில் சுவரில் தொங்கும் சங்கிலி கம்பி, ஒரு துண்டு ரொட்டி மற்றும் பல கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டேவிட் பாய்டு குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துவந்தாலும், சிறுமிகள் வரைந்த வரைபடங்களைக் காண்பித்தபோது அவர் பதற்றத்தில் Bathroomக்கு ஓடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது பிணைத் தொகை $100,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், மே 7 ஆம் தேதி வழக்கின் முதன்மை விசாரணை நடைபெறவுள்ளது