தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கு யூடியூப் சேனலை பயன்படுத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் மார்ச் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி, வேலூரில் 11 ஆம் தேதி முதல் மார்ச் 13ஆம் தேதியில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்கள் 18 வயதிற்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி பற்றி கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.