சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பாஜகவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும் என தேர்தல் முடிந்ததும் வழக்கு தொடர்வேன். நாட்டின் தேசிய மலர் எனக் கூறப்படும் தாமரை ஏன் பாஜகவுக்கு ஒதுக்கினார்கள்? மயில் சின்னம் கேட்டால் தேசிய பறவை என மறுத்துவிட்டு தாமரை சின்னத்தை மட்டும் ஏன் வழங்கினீர்கள்? தேசிய மலராக வேறு ஒன்றை அறிவித்துவிட்டு பாஜகவுக்கு தாமரை சின்னத்தை ஒதுக்குங்கள். நாதகவின் விவசாயி சின்னத்தை வேறொரு கட்சிக்கு கொடுக்க அவசரம் ஏன்?

நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதத்தை குறைக்க சதி நடக்கிறது. அண்ணாமலை என்பவர் பாஜகவின் மேனேஜர் தானே தவிர, மாநில தலைவர் அல்ல. யார் எங்கு போட்டி என்பதை தேசிய தலைமை அறிவிக்கும் என அண்ணாமலை கூறுகிறார், அவர் தலைவரா?. என்னை போல் முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், அண்ணாமலை போன்றோரை தனித்துப் போட்டியிட சொல்லுங்கள். பாஜகவுக்கு தாமரை சின்னத்தை ஒதுக்கியது குறித்து வழக்கு தொடர்வேன்” என தெரிவித்துள்ளார்.