மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் 32 நாட்களை எட்டியுள்ள நிலையில், தனது நட்பு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் போதிய ஒத்துழைப்பு வழங்காத பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள், இனி தற்காப்பு மற்றும் எரிபொருள் தேவைகளுக்கு அமெரிக்காவைச் சார்ந்திருக்கக் கூடாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்கா எப்போதும் உங்கள் பின்னால் இருக்காது; சொந்தமாகப் போராடக் கற்றுக்கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ள டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள ஜெட் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, அந்த நாடுகள் அமெரிக்காவிடமிருந்து எண்ணெயை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம் எனப் புதிய ஆலோசனையை வழங்கியுள்ளார்.
குறிப்பாக, அமெரிக்க ராணுவ விமானங்கள் தனது வான்வெளியில் பறக்க அனுமதி மறுத்த பிரான்ஸ் நாட்டின் செயலை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
