பேடிஎம் நிறுவனம் தொடர்ந்து அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை சந்தித்து வரும் நிலையில் தற்போது சுங்க கட்டணத்தை வசூலிக்கும் இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் FASTag வழங்கும் வங்கிகளின் பட்டியலில் இருந்து Paytm payment வங்கியை நீக்கி உள்ளது. ஆனால் PAYTM வாலட்டில் உள்ள நிதிகள் தீர்ந்து போகும் வரை FASTAGஐ பயன்படுத்தப்படலாம். PAYTM மீதான RBI கட்டுப்பாடுகளை அடுத்து IHMCL இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.