இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரல் ஆகிறது. அந்த வகையில் தற்போது ஜல்லிக்கட்டு போட்டி போன்ற ஒரு வீடியோ வைரலாகிறது. அந்த வீடியோவில் ஒரு காளை மாடு மனிதனை தாக்குவதற்காக வேகமாக ஓடி வருகிறது. அப்போது அந்த மனிதன் தரையில் படுத்து கொள்கிறான். அருகில் வந்த மாடு அவரை முகர்ந்து பார்த்துவிட்டு தாக்காமல் சென்றது.

பின்னர் அவர் எழுந்திருக்க முயற்சி செய்தபோது மீண்டும் காளை அவரை தாக்க முயற்சித்தது. இதனால் அவர் மறுபடியும் தரையில் படுத்து கொள்கிறார். பின்னர் மாடு அங்கிருந்து தாக்காமல் சென்றது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.