நடிகை விஜயலட்சுமி சீமான் திருமணம் செய்வதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிவிட்டதாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் இது தொடர்பான வழக்கை 12 வாரங்களுக்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் அவர் ஆஜராகாததால் நேற்று அவருடைய வீட்டில் போலீசார் சம்மனை ஓட்டினர். அந்த சம்மனை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் கிழித்ததோடு போலீசாரையும் தாக்கியுள்ளனர். அதாவது சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜ் துப்பாக்கியை வைத்து போலீசாரை மிரட்டியதாக புகார் எழுந்த நிலையில் அவரையும் மற்றொரு காவலாளியும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் இருவருக்கும் மார்ச் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமல்ராஜை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் என்பவர் கைது செய்த நிலையில் சீமானின் மனைவி அவரிடம் மன்னிப்பு கேட்டபோதிலும் அதனை ஏற்க மறுத்து கோபத்தோடு அமல்ராஜை சட்டையை பிடித்து இழுத்துச் சென்றார். இந்த நிலையில் பிரவீன் ராஜேஷூக்கு தற்போது வேறொரு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு சோமங்கலத்தைச் சேர்ந்த வக்கீல் பார்த்திபன் என்பவர் மீது தாக்குதல் நடத்தியதாக பிரவீன் ராஜேஷ் மீது வழக்கு உள்ளது. மேலும் இந்த வழக்கில் வருகிற 3ஆம் தேதி பிரவீன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வலியுறுத்தி அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
