பெங்களூருவில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பேசி இருக்கும் அவர், நீங்கள்தான் என் கணவர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். பெங்களூரு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று பேசும் விஜயலட்சுமி கணவர் சீமானுடன் சேர்த்து வையுங்கள்.

சீமான் மாமா நான் ரொம்ப கஷ்டத்தில் உள்ளேன். உங்க கிட்ட ஆயிரம் சண்டைப் போட்டாலும் உங்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். என் கடைசி மூச்சு வரைக்கும் நீங்கள்தான் என் கணவர் என்று வாழ்வேன். என்னால் உங்களை பிரிந்து வாழ முடியவில்லை என கூறியுள்ளார்.