இயக்குநர் சேரன் முதல்முறையாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களான இடும்பாவனம் கார்த்திக் (வேதாரண்யம்) மற்றும் கார்த்திகேயன் (பல்லாவரம்) ஆகியோரை மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

​மக்களுக்காகக் குரல் கொடுக்கவும், சேவை செய்யவும் இவர்கள் தகுதியானவர்கள் என்று சேரன் குறிப்பிட்டுள்ளார். எளிய மக்களின் கோரிக்கைகள் சட்டப்பேரவையில் ஒலிக்கவும், அது அரசின் காதுகளுக்குச் சென்றடையவும் இவர்களைப் போன்றவர்கள் வெற்றி பெறுவது அவசியம் என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.