தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள வேளையில், சேலம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் அஇபுதமமுக (AIPTMK) வேட்பாளர் ஏ.எல்.சுரேஷை ஆதரித்து சசிகலா இன்று (ஏப். 19) அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகச் சாடிய அவர், “கல்யாண வீட்ல சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா? அதுபோலத் தான் எடப்பாடி தொகுதியில் போட்டியிடவிருந்த தவெக வேட்பாளர் அருண்குமாரின் மனுவைத் திட்டமிட்டுத் தள்ளுபடி செய்ய வைத்துள்ளனர்.
#WATCH | “கல்யாணத்தில் சீப்பை ஒளித்து வைத்த மாதிரி.. விஜய் வேட்பாளரை இபிஎஸ் போட்டியிட விடல”
எடப்பாடி தொகுதியில் அஇபுதமமுக வேட்பாளர் ஏ.எல்.சுரேஷை ஆதரித்து சசிகலா பரப்புரை#SunNews | #Sasikala | #Edappadi | #TNElectionWithSunNews pic.twitter.com/d5qMz0c2Rv
— Sun News (@sunnewstamil) April 19, 2026
“>
விஜய்யின் வேட்பாளரைப் போட்டியிட விடாமல் தடுத்தால், இபிஎஸ் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறார். ஆனால், எடப்பாடி தொகுதி மக்கள் இபிஎஸ்-ஸின் இந்த அரசியல் விளையாட்டிற்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று ஆவேசமாக முழங்கினார்.
தவெக வேட்பாளர் கடத்தப்பட்டதாக எழுந்த புகார்கள் மற்றும் மனு நிராகரிப்பு விவகாரத்தைச் சசிகலா கையில் எடுத்துப் பேசியிருப்பது எடப்பாடி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
