பீகார் மாநிலத்தில் உள்ள சீதா மாரி மாவட்டத்தில் பூப்ரி ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு கடந்த வியாழக்கிழமை தன்னுடைய உறவினர் ஒருவரை ரயிலில் ஏற்றி விடுவதற்காக வாலிபர் ஒருவர் வந்திருந்தார். அவருடைய பெயர் முகமது ஃபர்கான்‌ (25). இந்நிலையில் நடைமேடையில் ரயில் வந்து நின்ற நிலையில் முன்பதிவு இல்லா அந்த ரயிலில் சீட் பிடிப்பதில் பயணிகளுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ரயில்வே போலீசார் இருவர் அங்கு வந்தனர். அவர்கள் பயணிகளை கட்டுப்படுத்துவதற்காக தடியடி நடத்தினர். அப்போது ஃபர்கானை அவர்கள் சரமாரியாக அடித்தனர்.

இதில் அவருடைய குடல் சரிந்து வெளியே வந்தது. அதாவது அந்த வாலிபருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆப்ரேஷன் நடந்தது. இதனால் வயிற்றில் தையல் போடப்பட்டிருந்த நிலையில் காவலர்கள் அடித்ததில் குடல் வெளியே வந்துவிட்டது. உடனடியாக அந்த வாலிபர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ரயில்வே எஸ்.பி உட்பட இரு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.