திமுக தலைவர்களின் ரூ.1,343,170,000,000 (கோடி) சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு மட்டும் ரூ.2010 கோடி சொத்து இருப்பதாகவும், அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என்.நேரு, கனிமொழி, சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியலையும் வெளியிட்டார். மேலும், திமுகவின் சொத்துப் பட்டியல் விவகாரம் தொடர்பாக சிபிஐயில் இன்று புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சீட்டிங் அண்ணாமலை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ரஃபேல் வாட்ச் பில் காட்டுகிறேன் என ஏதோ ஒரு பேப்பரை காட்டி ஏமாற்றுகிறார். பில் எங்கே? சீட்டிங் உடன் தான் பேட்டியையே ஆரம்பித்தார். சீட்டிங் அண்ணாமலை சொத்து பட்டியலில் விருப்பத்திற்கு ஏற்ப பூஜ்ஜியத்தை சேர்த்துள்ளார். அண்ணாமலை பேட்டியால் சிரிப்புதான் வந்தது என ஆர் எஸ் பாரதி பதில் அளித்துள்ளார்.