தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று ‌DMK Files என்ற பெயரில் திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியல் 15 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளார். அதன்படி திமுகவினர் மொத்தமாக 1 லட்சத்து 34 ஆயிரத்து 317 கோடி ரூபாய் சொத்துக்கள் வைத்திருப்பதாக வீடியோவில் கூறிய அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு 50,219.37 கோடி ரூபாய், எ.வ.‌ வேலு 5442.39 கோடி ரூபாய், கே.என் நேரு 2495.14 கோடி ரூபாய், எம்பி கனிமொழி 830.33 கோடி ரூபாய், கலாநிதி மாறன் 12,450 கோடி ரூபாய், டி.ஆர். பாலு 10,841 ரூபாய். துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் 579.58 கோடி ரூபாய், கலாநிதி வீரசாமி 2,923.29 கோடி ரூபாய், பொன்முடி மற்றும் கௌதம் சிகாமணி 581.20 கோடி ரூபாய், திமுக கட்சியின் சொத்து மதிப்பு 1,408.94 கோடி‌ ரூபாய், அன்பில் மகேஷ் பொய்யாமொழி 1023.22 கோடி ரூபாய், உதயநிதி ஸ்டாலின் 2,039 கோடி ரூபாய், ஸ்டாலின் மருமகன் சபரீசன் 902.46 கோடி ரூபாய், ஜி ஸ்கொயர் வருமானம் 38,827.70 கோடி ரூபாய் என்று அண்ணாமலை வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இது போக முழு விவரத்தை தெரிந்து கொள்ள enmannenmakkal.com என்ற இணையதளத்தை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்ட் 2 விரைவில் வெளிவரும் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ள நிலையில் தற்போது திமுகவில் புதிதாக சேர்ந்துள்ள நபர்களின் கருப்பு பணம் மற்றும் பினாமிகளின் சொத்துக்கள் 20,000 கோடி ரூபாய்க்கு மேல் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விவரம் பார்ட் 2-வில் வெளிவருமாம். மேலும் அதிமுகவின் ஊழல் பட்டியலும் விரைவில் வெளிவரும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.