தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்திற்காகத் தமிழகமே ஆவலோடு காத்திருப்பதாக நடிகர் ஸ்ரீமன் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிக உருக்கமாகப் பதிவிட்டுள்ள அவர், “நாங்கள் ஊதும் விசில் சத்தம் வெறும் வாயிலிருந்து வெளிவருவது மட்டுமல்ல; அது நமது இதயத்தின் ஆழத்திலிருந்து எழும் குரல்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குரல் கடவுளின் காதுகளிலேயே ஒலிக்கிறது என்றும் அவர் உணர்ச்சிவசப்பட்டுப் பதிவிட்டுள்ளார்.
மேலும், சட்டப்படி மேற்கொள்ளப்பட்டு வரும் முறையான முயற்சிகள் நிச்சயம் பலன் கொடுக்கும் என ஸ்ரீமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “சி. ஜோசப் விஜய் எனும் நான்” என்று விஜய் உறுதிமொழி ஏற்கும் காலம் மிக அருகில் இருப்பதாகவும், அந்த வார்த்தையைக் கேட்க ஒட்டுமொத்தத் தமிழகமும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீமனின் இந்த எமோஷனல் பதிவு தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி, இணையத்தையே ஆக்கிரமித்து வருகிறது.
