தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிக அளவு நடித்துள்ளார். இந்த நிலையில் வில்லனாக நடிக்க நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

வில்லனாக நடிப்பதில் சில சிக்கல்கள் உள்ளதால் மன அழுத்தம் ஏற்படுகின்றது. ஹீரோவின் இமேஜை குறைக்காமல் நடிக்க சொல்கிறார்கள். வில்லனாக நடிக்க விருப்பமில்லை என்று சொன்னால் கதையை ஆவது கேளுங்கள் என சொல்கிறார்கள். அதனால் சில வருடங்களுக்கு வில்லனாக நடிக்க வேண்டாம் என முடிவு செய்திருக்கிறேன் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.