நாடு முழுவதும் வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தி வருகிறது. தற்போது இண்டேன் நிறுவனம் வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி மக்கள் சிலிண்டர் புக்கிங் செய்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் சிலிண்டரை டெலிவரி செய்ய வேண்டும் எனவும் கிராம பகுதிகளில் சிலிண்டர் டெலிவரி செய்ய 4 முதல் 5 நாட்கள் எடுத்துக் கொள்வதாக புகார் எழுத்த நிலையில் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் புக்கிங் செய்தால் அடுத்த 24 மணி நேரத்தில் வழங்கி விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கடைசி நேரத்தில் சிலிண்டர் புக்கிங் செய்வதால் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் சிலிண்டர் கிடைக்காமல் போகின்றது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிலிண்டர் டெலிவரி மேற்கொள்ள வேண்டும் என்று ஏஜென்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.