பொதுவாக சிலிண்டர்களை புக்கிங் செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. மிஸ்டு கால் மூலமாக, ஆன்லைன் மூலமாக மற்றும் எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமாக சிலிண்டர் புக் செய்யலாம். ஆனால் இதில் எந்த வழியில் புக்கிங் செய்தால் உங்களுக்கு நன்மை கிடைக்கும் என்றும் எதில் சிரமங்கள் குறைவு என்பதையும் பார்க்க வேண்டும். சில நேரங்களில் நீங்கள் சிலிண்டரின் விலையை விட அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். பெருமாளான மக்கள் தற்போது ஆன்லைன் மூலமாக சிலிண்டர் விலை முன்பதிவு செய்கிறார்கள்.

ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் ஏற்றவாறு சிலிண்டரை புக் செய்யலாம். Indane கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண் மூலமும், hp கேஸ் வாடிக்கையாளராக இருந்தால் 9222201122 என்ற எண் மூலமும் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். Bharat petroleum சிலிண்டர் வாடிக்கையாளராக இருந்தால் 1800224344 என்ற எண்ணுக்கு hi என்று மெசேஜ் அனுப்பினாலே உங்களுடைய சிலிண்டர் புக் செய்யப்படும்.