இந்தியாவின் சில்லரை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 5.5 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக  தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வே, இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதாவது கொரோனாவுக்கு பின்னர் உயர்ந்து வந்த பணவீக்கம், ரெப்போ வட்டிவிகித அதிகரிப்பால் கட்டுக்குள் வந்தது.

தற்போது அது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் பொருளாதார அறிஞர்கள் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியிருக்கின்றனர். பணவீக்கம் 6 விழுக்காடுக்கு மேல் உயர்ந்தால் ஆர்பிஐ மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு உள்ளது.