உத்திர பிரதேச மாநிலம் கர்ஹால் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கம்பீரா கிராமத்தில் எதிர்பாராத விதமாக திருமணம் ரத்து செய்யப்பட்டது. திருமண ஊர்வலத்தில் மணமகன் உற்சாகமாக நடனமாடினார். அவர் மதுபோதையில் இருந்ததாக மணமகள் சந்தேகப்பட்டார். பரிசோதனையில், மணமகனும், அவரது தந்தையும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. உடனே மணமகள் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். ஊர் பெரியவர்கள், உறவினர்கள் மணமகளிடம் பேசியும் அவர் தன் முடிவிலிருந்து பின் வாங்கவில்லை. இதனால் திருமணம் நின்று போனது.

இது தொடர்பாக மணமகளின் உறவினர் தெரிவித்துள்ள தகவலில், திருமணம் சிறப்பாக நடைபெற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம், ஆனால் மணமகனின் வீட்டார்கள் நன்றாகவே குடித்து இருந்தனர். நிலைமை மோசமானதால் மணமகள் மண மேடையில் உட்கார மறுத்துவிட்டார். இதையடுத்து  காவல்துறைக்கு அறிவித்தோம் என தெரிவித்துள்ளார்.