சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்துள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியமாக வழங்குவதாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நினைவுப்படுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு, நன்றி.

இந்த நேரத்தில், சிலிண்டருக்கு ரூ.100 மானியமாக வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி எண் 503-ல் கூறிய ஊழல் திமுக, ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் கடந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதைக் குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதை நினைவுபடுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.