தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கான ஆயிரம் உதவி தொகை திட்டம் அல்லது செப்டம்பர் 15ஆம் தேதியில் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1.63 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த திட்டம் தொடங்குவதற்கு இன்னும் 17 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் விண்ணப்பத்தை சரிபார்க்கும் பணியானது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த மாத இறுதிக்குள் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த உரிமை தொகையை பெற தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இந்நிலையில் மகளிருக்கான 1000 உரிமைத் தொகை பெறுவதற்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு கட்டாயம். இப்படியான கணக்கு இல்லாத மகளிருக்கு சிறப்பு ஏற்பாட்டினை போஸ்ட் ஆபீஸ் செய்துள்ளது. அருகில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ் மூலமாகவோ, தபால் காரர் மூலமாகவோ புதிய அக்கவுண்டினை போஸ்ட் ஆபீஸில் துவங்கிக் கொள்ளலாம் என்றும் இதற்கு கட்டணம் ஏதும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது