உத்தரப் பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடியாக, கடத்தல் கும்பலின் தலைவனைப் காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, பணயத்தொகைக்காகக் கடத்தப்பட்ட சிறுவனை அந்த கும்பல் கொடூரமான முறையில் கொலை செய்திருந்தது.

இது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த கடத்தல் கும்பல் தலைவனைப் பிடிக்கும் முயற்சியில் போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது.

இதில் காவல்துறையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் கும்பல் தலைவன் சுட்டுக்கொல்லப்பட்டான். “குற்றங்களுக்கு இடமில்லை” என்ற உபி அரசின் கடுமையான அணுகுமுறையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், மற்ற கூட்டாளிகளையும் பிடிக்கத் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.