இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிக அளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இப்படி வெளியாக கூடிய வீடியோக்களில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும்.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் வீதியில் குறுகலான ஒரு சாலையில் சிறுமியை நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது திடீரென ஒரு கார் வந்து மின்னல் வேகத்தில் சிறுமியின் அருகில் நிற்கிறது. சிறுமியை கடத்தும் நோக்கத்தில் வந்து அந்த கார் கதவை கடத்தல்காரர்கள் திறக்கின்றனர்.

அங்கு நாய் வடிவில் சூப்பர் மேன் மற்றும் ஸ்பைடர் மேன் வரும் என்று அவர்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை. கார் கதவு திறக்கப்பட்டு சிறுமியை தூக்க முயற்சிக்கும்போது காருக்கும் சிறுமிக்கும் இடையே நாய் ஒன்று வந்து நிற்கிறது. உடனே நாய் சத்தமாக குறைத்து கடத்தல்காரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை துரத்தி அடித்து விட்டது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.