கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜேடிஎஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகத்தான் தகவல்கள் வெளியாகி இருந்தது. குறிப்பாக உயர்மட்டலைவர்கள் இந்த பேச்சு வார்த்தையில் நடத்தினார்கள் என்பதாக தகவல்கள் எல்லாம் வந்து கொண்டிருந்த நிலையில்,  தற்போது ஒரு முடிவென்பது வந்திருப்பதாக தான் புரிந்து கொள்ள முடிகிறது. தேவகவுடா அவர்கள் பிரதமரை ஏற்கனவே சந்தித்திருந்தார்.

அந்த சந்திப்பிற்கு பிறகு தற்போது இந்த ஒரு இரண்டு கட்சிகள் இடையான கூட்டணியானது மலர்ந்திருக்கிறது என்பதை எடியூரப்பா அவர்கள் தற்போது உறுதிப்படுத்தி இருக்கின்றார். அதாவது கர்நாடகாவில் கடந்த தேர்தலின் போது முதலில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருந்த கட்சி பிறகு பாரதிய ஜனதா கட்சி உடன்  கூட்டணி வைத்திருந்தது. பிறகு அவர்களுடனும் பிரிந்து வந்து தனியாக இந்த முறை தேர்தலை சந்தித்து அதில் படுதோல்வி அடைந்திருந்தார்கள்.

இந்த சூழலில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றிணைகிறது என்ற தகவலானது தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பிஎஸ்.எடியூரப்பா அவர்களது பேட்டி மூலம் உறுதியாக இருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் இரண்டு கட்சிகளும் சேர்ந்து சட்டமன்றத்திலும் கூட கூட்டணி அமைக்கலாமா ?  வேறு ஏதேனும் எம்எல்ஏக்கள் தங்கள் பக்கம் வருவார்களா என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் செய்திகளாக தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.