நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு எட்டு மாதம்தான் இருக்கிறது. அதற்குள் தென் மாநிலத்தில் எந்த மாநிலத்திலும் ஆட்சி செய்யாத பாரதிய ஜனதா கட்சி தென் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று ஒரு முனைப்பை காட்டி வருகிறார்கள். தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் அதிமுகவுடன் கூட்டணி என்பது வலுவுடன் இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் அவர்களினுடைய கூட்டணி என்பது மிகவும் அவசியமாகிறது. அந்த அடிப்படையில் தான் மாநிலத்தில் அதிகாரம் செலுத்தக்கூடிய ஜேடிஎஸ் கட்சியுடன் அவர்கள் கைகோர்த்து இருக்கிறார்கள். கூட்டணி என்பது உறுதியாகி இருக்கிறது. நான்கு தொகுதிகள் வரை கிடைக்கும் என்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவை எல்லாமே ஆரம்பகட்ட தகவல்கள் தான்.  சீட் பகிர்வு விஷயங்கள் ஏதும் இன்னும் முடிவாகவில்லை. ஆனால் கூட்டணி உறுதியாகி இருக்கிறது என்பதை தற்போது எடியூரப்பா உறுதிப்படுத்தி இருக்கிறார்.