மக்களவைத் தேர்தலில் கர்நாடகம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நாலு தொகுதிகளை பாஜக ஒதுக்கி உள்ளது.

கர்நாடகாவில் பாஜக மத சார்பற்ற ஜனதா தளம் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது என பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான எடியூரப்பா பேட்டி அளித்துள்ளார். கூட்டணியில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 4  தொகுதிகள் ஒதுக்க அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் எடியூரப்பா தெரிவித்தார். பிரதமர் மோடியுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடா சந்தித்த நிலையில் தொகுதி ஒதுக்கீடு நிறைவடைந்து  உள்ளது என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.