திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், பாஜக அரசு கொண்டுவந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு போலி நம்பர். செல்போன் உடைய ஒரு போலி நம்பர். அந்த நம்பர் என்ன தெரியுமா ? 9 9 9 9 9 9 9 9 9 9பத்து 9 நம்பர். அந்த போலி செல்போன் நம்பர்ல 7.5 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டு,  அதுல ஊழல் நடந்து இருக்கு. எப்படி ? பச்சையா ஒரு மோசடிய பண்ணி இருக்காங்க. என்னன்னா…  ஆயுஷ்மான் பாரத திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற நோயாளிகள்ல… 88 ஆயிரத்து 760 பேர் இறந்துட்டாங்க.

ஆனால் அவர்கள் இறந்த பிறகும் சிகிச்சை அளிக்கப்படுவதாக சொல்லி..   2 லட்சத்து 14 ஆயிரத்து 923 காப்பீட்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு,  காப்பீட்டு தொகை வழங்கியிருக்கிறார்கள். செத்துப் போனவர்களுக்கும் காப்பீட்டு தொகை வழங்கியிருக்காங்க. தகுதி இல்லாத குடும்பங்கள் இந்த திட்டத்தின் பயனாளியாக பதிவு செய்யப்பட்டு, சுமார் 22 கோடியே 44 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருக்கிறது. இதை நாங்கள் சொல்லவில்லை.

எங்க இந்தியா கூட்டணி சொல்லலை. இதை கண்டுபிடித்து சொல்லியிருக்கிறது மத்திய அரசினுடைய ஒன்றிய அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஆய்வறிக்கையை வெளியிடக்கூடிய CAG  அறிக்கை சொல்லுது என தெரிவித்தார்.