தமிழகத்தில் மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் பரப்புரையில் திமுகவும் அதிமுகவும். மாறி மாறி போட்டோ அரசியலை கையில் எடுத்துள்ளன. பிரதமர் மோடி உடன் இபிஎஸ். சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தை காட்டி ‘அதிமுக – பாஜக இடையே கள்ள உறவு’ இருப்பதாக உதயநிதி விமர்சித்தார். இதற்கு இபிஎஸ், மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து, “நீங்க சிரிச்சா சரி, நான் சிரிச்சா தப்பா?” என்று பதிலடி கொடுத்துள்ளார்