சிப்ஸ் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு சிற்றுண்டியாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது ‘X’ (முன்னர் ட்விட்டர்) சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி, சிப்ஸ் பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாம் விரும்பிச் சாப்பிடும் சிப்ஸ் எவ்வளவு அசுத்தமான மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது என்பதை இந்தப் பதிவு அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டுகிறது.

​தயாரிப்பு கூடங்களில் எவ்வித சுகாதார விதிமுறைகளும் பின்பற்றப்படாமல், மிக மோசமான சூழலில் சிப்ஸ் உருவாக்கப்படுவதைக் காணும் எவரும், “இனி சிப்ஸ் தான் எனக்குப் பிடித்த தின்பண்டம்” என்று சொல்லத் துணியமாட்டார்கள். சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் இந்தக் காணொளி, தின்பண்டங்களின் தரம் குறித்து பொதுமக்களிடையே பெரும் விழிப்புணர்வையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.