ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை என்ற பாடல் எடுக்கப்பட்ட இடம் பாணதீர்த்தம். இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு பொதுமக்கள் செல்வதற்கு கடந்த 9 வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இயற்கை பாதுகாப்பு நோக்கத்தோடு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக இந்த பாணதீர்த்தம் அருவியை 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாதம் 18ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அருவிக்கு  அடர்ந்த காட்டில் 24 கிலோமீட்டர் தொலைவிற்கு ஜீபில் செல்ல வேண்டும்.

இங்கு செல்ல மொத்தம் 2 மணி நேரம் ஆகும். இதில் பயணிக்க முண்டந்துறை புலிகள்  காப்பக அலுவலகத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும். எனவே காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை முண்டந்துறை ரேன்ஜ் அலுவலகத்தில் டிக்கெட் பெற்றுக்கொண்டு பயணிகள் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் இந்த அருவிக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அருவியல் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாது. இருந்தாலும்   50 மீட்டர் இடைவெளியில் இருந்து தான் இதை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றாலும் இது கண்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.