பொதுவாகப் பாம்பு என்றாலே ‘படை நடுங்கும்’ என்பார்கள். அதிலும் உலகின் மிகவும் அபாயகரமான பாம்பாகக் கருதப்படும் அனகோண்டா, ஒரு வகுப்பறைக்குள் புகுந்தால் எப்படி இருக்கும்? அதுபோன்ற ஒரு அதிரவைக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளியாகியுள்ள அந்த சிசிடிவி (CCTV) காட்சியில், ஒரு பள்ளி வகுப்பறை காலியாக உள்ளது. திடீரென வகுப்பறையின் மேற்கூரையில் ஒரு அசைவு ஏற்படுகிறது. சில வினாடிகளில் கூரையின் ஒரு பகுதி உடைந்து விழ, அங்கிருந்து சுமார் 20 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட அனகோண்டா ஒன்று வகுப்பறைக்குள் தொங்குகிறது.
அடுத்த சில கணங்களில் அந்தப் பாம்பின் முழு உடலும் தரைத்தளத்தில் விழுகிறது. அந்த ராட்சத பாம்பின் உடல் மட்டுமே அந்த வகுப்பறை முழுவதும் ஆக்கிரமித்திருப்பது காண்போரை உறைய வைக்கிறது. இந்த வீடியோ ‘அன்மோல் போரா’ (anmolbohraa) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு, ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதைப் பார்த்த இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்:
View this post on Instagram
நல்லவேளையாக வகுப்பறையில் குழந்தைகள் யாரும் இல்லை, அதுவரை நிம்மதி” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். ஆசிரியர் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்?” என்று மற்றொருவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
வீடியோ வைரலாகி வந்தாலும், அதன் உண்மைத்தன்மை குறித்துப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். “இது நிஜமான பாம்பாக இருக்க வாய்ப்பில்லை, ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காட்சியாக இருக்கலாம்” என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தத்ரூபமாக உள்ள இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ட்ரெண்டிங்கில் உள்ளது.
