சிங்கப்பூரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மார்க் கலைவாணன் கலையரசன் என்பவர் அந்நாட்டில் பாலியல் குற்றச்சாட்டு புரிந்த குற்றத்திற்காக 16 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து 2017 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் குடிபோதையில் முன்பின் தெரியாத அப்பார்ட்மெண்ட் ஒன்றில் நுழைந்து அங்கு ஒரு வீட்டில் இருந்த பணி பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார்.

இதனால் அந்த பெண் கூச்சலையிட மார்க் கலைவாணனை அப்பகுதியினர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நீதிமன்றத்தில் காவல் துறையினர் அவரை ஆஜர்படுத்தியபோது  போது அவருக்கு 18 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் மார்க் கலைவாணன் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவர் என வாதிட  பட்ட நிலையில் சிங்கப்பூர் தண்டனை சட்டத்தின்படி அவருக்கு 12 பிரம்படிகள் கொடுக்கவும் உத்தரவிடப்பட்டது.