சீனாவின் ஷாண்டாங்  மாகாணத்தில் உள்ள நூடுல்ஸ் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் சென்று விலை கேட்டபோது அவர் ஒரு கிண்ணம் இந்திய மதிப்பில் 164 ரூபாய் எனக் கூறியுள்ளார். இதற்கு விலை அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர் கூறியுள்ளார். இதனால் விற்பனையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விற்பனையாளரின் மகன் நூடுல்ஸ் வாங்க பணம் இல்லை என்றால் வெளியே செல்லுமாறு ஆவேசமாக கூறியுள்ளார்.

இதனால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்த வாடிக்கையாளர் கடையில் உள்ள அனைத்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளையும் விலை கேட்டுள்ளார். அதற்கு 9,920 ரூபாய் என விற்பனையாளர் கூறியதும் அந்த பணத்தை கொடுத்து அனைத்து பாக்கெட்டுகளையும் வாங்கி தரையில் போட்டு நொறுக்கி நாசம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி பேசு பொருளாகி உள்ளது.