சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இயற்கையின் சக்தியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. தார்ச்சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு பெரிய லாரி, பலத்த காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல், வெறும் வைக்கோல் துரும்பைப் போல தூக்கி வீசப்பட்டக் காட்சி பார்ப்பவர்களை உரைய வைத்துள்ளது.
மேலும் காற்றின் வேகம் எந்த அளவுக்குத் தீவிரமாக இருந்தது என்பதை இந்த வீடியோ படம் பிடித்துக் காட்டுகிறது. சாலையில் மற்ற வாகனங்கள் சென்று கொண்டிருந்த போதே, கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
टेक्सास के डुमास में तेज़ हवाओं से एक चलता ट्रक पलट गया… हवा की रफ्तार करीब 30 से 40+ मील प्रति घंटा थी…. pic.twitter.com/0mQILGbk5E
— Dinesh Dangi (@dineshdangi84) February 18, 2026
“>
இந்தச் சம்பவம் குறித்த வீடியோவைப் பார்க்கும் போது, இயற்கையின் முன்னால் மனித இயந்திரங்கள் எவ்வளவு பலவீனமானவை என்பது புரிகிறது. அந்த லாரி காற்றின் திசைக்கு ஏற்ப ஒருபுறமாகச் சரிந்து, பின் அப்படியே சாலையில் கவிழ்ந்தது.
இந்த அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. வாகன ஓட்டிகள் இத்தகைய மோசமான வானிலை நிலவும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
