இன்று இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது போட்டி தொடங்கியது. இந்த நிலையில் பத்தாவது ஓவரின் முடிவில் பந்தை கையில் எடுத்துக்கொண்டு ஓவர் மாற்றுவதற்காக விராட் கோலி நடந்து சென்றார். எதிர்ப்புறம் ஆஸ்திரேலியா இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ் ஆஸ்திரேலிய வீரர் சாம் கான்ஸ்டாஸ் நடந்து சென்றார். அப்போது சாம் கான்ஸ்டாஸும் விராட் கோலியும் இடித்து கொண்டனர்.
அப்போது விராட் கோலி சாம் கான்ஸ்டாசை முறைத்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. விராட் கோலியை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் விராட் கோலி மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மேட்ச் சம்பளத்திலிருந்து விராட் கோலிக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
