குஜராத்தின் புகழ்பெற்ற அம்பாஜி கோவில் உண்டியல் பணத்தை எண்ணும் போது, ஊழியர் ஒருவர் பணத்தை திருடி மறைத்து வைக்கும் பழைய சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வெளி முகமை மூலம் நியமிக்கப்பட்ட அந்த ஊழியர், காணிக்கை பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும் போதே சில ரூபாய் நோட்டுகளை லாவகமாகத் தனது காலின் அடியில் மறைத்து வைப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
REVEALING: Another day, another temple theft under scanner, this time in famed Ambaji Mandir in Gujarat. Viral video shows temple employee hiding currency notes under his feet while counting cash! Three accused have been booked following a complaint by temple administration.… pic.twitter.com/7ka7TNkfFg
— Rajdeep Sardesai (@sardesairajdeep) July 14, 2026
“>
இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, வழிபாட்டுத் தலங்களில் இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடப்பது ஏமாற்றம் அளிப்பதாகப் பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பெரிய கோவில்களில் காணிக்கை பணத்தை எண்ணும் போது ஊழியர்களைச் சோதனை செய்வது மற்றும் கூடுதல் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவது போன்ற கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோவிலிலும் சமீபத்தில் இது போன்ற பண முறைகேடு புகார்கள் எழுந்து விசாரணை நடந்து வரும் வேளையில், இந்த அம்பாஜி கோவில் சிசிடிவி வீடியோ ஆன்லைனில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
