விழுப்புரம் தெற்கு நகரக் கழகச் செயலாளர் ஆர்.பசுபதி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்படுவதாகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சி.வி. சண்முகம் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கட்சிப் பொறுப்புகளை வழங்கி வருவதாகவும், கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும் பசுபதி நேற்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

​கட்சியின் கொள்கைக்கும், தலைமைக்கும் எதிராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் பசுபதியின் இந்தப் பேச்சு, தற்போது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.வி. சண்முகத்திற்கு எதிராகக் குரல் எழுப்பிய கையோடு, அவர் நீக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் உட்கட்சிப் பூசலை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.