சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தப்படும் போல்கோடின் என்ற ஒரு மருந்து எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாக மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மருந்து உட்கொண்டவர்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏதேனும் ஒரு அறுவை சிகிச்சைக்காக அவர்களுக்கு மயக்க மருந்து செலுத்தும் பொழுது தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரை ஏற்று இந்த அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு மருந்து ஒழுங்குமுறை ஆணையங்கள் இந்த மருந்தை திரும்ப பெற்றனர். அதன்படி மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறையினர் நோயாளிகள் இந்த மருந்துக்கும் பதிலாக வேறு மருந்து எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்க வேண்டும் என்று சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல நோயாளிகளும் இந்த மருந்தை மருத்துவரை பரிந்துரை இல்லாமல் உட்கொள்ள கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.