நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஏழாவது ஊதிய குழு அடிப்படையில் அகலவிலைப்படி மற்றும் ஊதியம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் எட்டாவது ஊதிய குழுவை கொண்டுவர ஊழியர்கள் அனைவரும் வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி 2024 ஆம் ஆண்டு எட்டாவது ஊதிய குழு கொண்டுவரப்படும் என கூறப்படுகின்றது. இந்த ஊதிய குழு 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி ஊதியக்குழு அமலுக்கு வந்தால் ஊழியர்களின் ஊதியம் 2 1/2 மடங்கிற்கு மேல் உயரக்கூடும். அடுத்த மகிழ்ச்சி செய்தியாக நடப்பு ஆண்டில் இரண்டாம் கட்ட அகலவிலைப்படி உயர்வு நான்கு சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து எட்டாவது ஊதியக்குழு நடைமுறைக்கு வந்த பிறகு அடிப்படை ஊதியம் 26 ஆயிரம் ரூபாயாக உயரும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.