மத வழிபாட்டு தலங்களுக்குள் கேமரா உள்ளிட்ட உபகரணங்களை எடுத்து செல்வதற்கு பல மாநிலங்களில் தடை அறிவிப்புகள் இருந்து வருகிறது. அதுபோன்ற உபகரணங்களை எடுத்து செல்வதால் அந்த இடங்களுக்கான புனித தன்மை மீறப்படுவதாக சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதனைப் போலவே கோவில்களுக்குள் செல்போன் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பல தரப்பினர் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

கோவில்களுக்குள் செல்போன் எடுத்து செல்வதால் மற்ற பக்தர்களுக்கும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் சங்கடங்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் கோவில்களுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில்களுக்குள்ளும் செல்லும்போது பக்தர்கள் தங்களின் செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து கொள்ள வேண்டும் என அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதனைப் போலவே கோவில்களுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.