ஆதார் என்பது இந்திய அரசாங்கத்தின் மிக முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் மிக முக்கியமான ஒன்று. ஆதாரில் உள்ள புகைப்படங்களை நாம் எடுத்து பல வருடங்கள் ஆகி இருக்கும் பட்சத்தில் நம்முடைய புதிய புகைப்படம் மாற்ற வழிமுறைகள் உள்ளது. அதேபோல ஆதாரில் பெயர், செல்போன் எண், முகவரி, பாலினம் பிறந்த தேதியையும் மாற்றிக் கொள்ளலாம். புகைப்படத்தை மாற்றுவதற்கான வழிமுறைகள்

முதலில் UIDAI யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

அதில் ஆதார் பிரிவில் ஆதார் புதுப்பிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

படிவத்தை பூர்த்தி செய்து அதை நிரந்தர பதிவு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அங்கு உங்களின் பயோமெட்ரி விபரங்கள் புதுப்பிக்கப்படும்.

இதற்காக நீங்கள் ரூபாய் 100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

பின்னர் உங்களுக்கு ஒரு ஒப்புகை சீட்டுடன், URL வழங்கப்படும்.

இந்த URL ஐ பயன்படுத்தி உங்கள் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.