பி எம் கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகள் 17வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் பகுதியில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று முறை தவணை தொகை செலுத்தப்படுகிறது . இந்நிலையில் 17 ஆவது தவணை விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ஆனால் அரசிடம் இருந்து இதற்கான அறிவிப்பு எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போதைய தகவலின் படி பதினேழாவது தவணை மே மாத இறுதிக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தவணை பெறுவதற்கு விவசாயிகள் ஒரு முக்கியமான வேலையை முடிக்க வேண்டும். விவசாயிகள் தங்களுடைய கணக்கில் கேஒய்சி விவரங்களை சரிபார்த்து முடிக்க வேண்டும். அதை செய்யாவிட்டால் அடுத்த தவணைத் தொகை பணம் உங்களுக்கு கிடைக்காது.