ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது. மகளிருக்கான காம்பவுண்ட் வில்வித்தை போட்டியில், இந்தியா-சீனா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 230-228 என்ற புள்ளியில் இந்தியாவின் ஜோதி, அதிதி, பரினீதி அணி தங்கம் வென்றது. இது வில்வித்தையில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது தங்கம். இதனால் 18-தங்கம், 31-வெள்ளி, 32-வெண்கலம் என 81 பதக்கங்களுடன் 4ம் இடத்தில் உள்ளது.
