
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில், 8 மணி நேர வேலையை பன்னண்டு மணி நேரமாக மாற்றும் சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிசம், மதிமுக மற்றும் மமகஉள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சட்டத்தை இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.
இதனை தொடர்ந்து மின்னணுவியல், ஐடி நிறுவனங்கள், காலணி ஆலைகள் போன்றவற்றையும் தான் 12 மணி நேரம் வேலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 4நாட்கள் தினசரி 12 மணி நேரம் வேலை பார்த்தால் மூன்று நாட்கள் விடுமுறை வழங்க சட்ட மசோதா வழிவகை செய்கிறது. அதுவும் தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே 12 மணி நேரம் வேலை வழங்கப்படும். விருப்பமில்லை என்றால் கிடையாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.