அமைச்சர் எ.வ.வேலுவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவரும், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளருமான கோவை மீனா வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மீனா வீட்டில் நடைபெற்று வரும் சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மீனா மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அவரது கணவரிடம் விசாரணை நடைபெறுகிறது.