மேற்குவங்க CM மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும் போது காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அம்மாநில பஞ்சாயத்து தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள மம்தா சென்ற போது, மோசமான வானிலை காரணமாக அவர் பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில், அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து, கொல்கத்தா திரும்பிய அவர் மருத்துவமனைக்கு சரியாக நடக்க முடியாமல் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.