கானோ மாநிலத்தின் கெசாவா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர சாலை விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் வந்த = லாரி மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கானோ மாநிலத்தின் குவானார் பார்டே என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஜிகாவா மாநிலத்தின் குஜுங்கு பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து கானோ மாநில ஆளுநர் அப்பா யூசுப் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது செய்தித் தொடர்பாளர் சுனுசி டவாகின்-டோஃபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த விபத்து மிகவும் பேரழிவானது மற்றும் மனதை உடைக்கக்கூடியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் கானோ மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆளுநர் போர்க்கால அடிப்படையில் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்:
